இடுகைகள்

WhatsApp ன் மறைமுகம்

படம்
WhatsApp ன் புத்தாண்டு முடக்கம் ஏன் ஒரு திட்டமிட்ட முடக்கமாக இருக்கக்கூடாது?  பல நாடுகளின் புதுவருடம் பிறக்கும் நேரத்தில் ஒவ்வொரு நாட்டிற்க்கும் எப்படி முடங்கும். இந்தியாவில் 12 மணிக்கு முன்பே முடங்கியது எப்படி சாத்தியம்? அதிகப்படியான வாழ்த்துக்கள் 12 மணிக்கு முன்பே செல்லத்துவங்கி விட்டதா என்ன?..  WhatsApp , Facebook கிற்க்கு வாங்கப்பட்டதில் இருந்து லாப நோக்கத்தை நோக்கி செயல்பட ஆரம்பித்தது நாம் அனைவரும் அறிந்ததே.!  புத்தாண்டை ஒட்டி பல நாடுகளில் சில நெட்வெர்க்கள் message களுக்கு அதிக கட்டணம் வசூளிக்கின்றன, மற்றும் special சலுகைகளும் ரத்து செய்கின்றன. சில நாடுகளில் தொலைதொடர்பு லாபத்திற்காக messengerகளின் குரல் அழைப்பு முடக்கப்படுள்ளதையும் நான் இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன்..  WhatsApp இற்க்கு அடுத்தபடியாக அதிக பயனர்களை கொண்டது messenger . மக்கள் எதை நோக்கி செல்வார்கள் என்பதும் நாம் அறிந்ததே...  இவ்வளவு இருப்பினும் நம் மீடியாக்கள் , சாதரண பிரச்சனைக்கே வீதி வரை நாரவைப்பவர்கள், வாழ்த்துக்களால் முடங்கியது WhatsApp என சூசி மொழுகுவது ஏன்?....